திருச்சி திருவறும்பூர் பஞ்சாயத்து, கீழக்குறிச்சி வசந்தம் நகர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தார் சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை சிதிலமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.