குண்டும், குழியுமான சாலை

Update: 2023-08-30 10:21 GMT

கோவை மாநகராட்சி 36-வது வார்டு வ.உ.சி. நகர் கோமியம்பாளையம் செல்லும் வழியில் தார்சாலை உள்ளது. இந்த சாலையை சீரமைக்க குண்டும், குழியுமான இடங்களில் ஜல்லி கற்கள் பரப்பி விப்பட்டது. ஆனால் இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக இரவில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்