காரைக்கால் மாதா கோவில் வீதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சாலை சீரமைக்கப்பட்டது. ஒரு பகுதி அமைக்கப்பட்ட நிலையில், மறுபாதி சாலை அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் பள்ளம், மேடாக சாலை இருப்பதால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே அரை குறையாக விடப்பட்ட சாலைப்பணியை முழுமையாக முடித்தால் நன்றாக இருக்கும்.