ராமநாதபுரம் நகரில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் வாசலில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை முற்றிலும் சேதமடைந்து அடிப்பகுதியில் உள்ள கான்க்ரீட் கம்பிகள் வெளியே தெரிவதால் வாகனங்களின் டயர்களை பதம் பார்க்கின்றன. நடந்து செல்லும் நோயாளிகள் தரையில் உள்ள கம்பியில் தட்டி, தடுமாறி கீழே விழுந்து காயமடையும் நிலை உள்ளது. எனவே இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி தீர்வுகாண வேண்டும்.