குண்டும், குழியுமான சாலை

Update: 2023-08-23 18:12 GMT
விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை பஸ் நிறுத்தத்தில் இருந்து மங்களம் செல்லும் சிமெண்டு சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடைபெறுகிறது. எனவே சாலையை சீரமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்