பண்ருட்டி தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள ஆதிப்பிள்ளைத்தெருவில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. ஆனால் பழைய சாலையை பெயர்த்து எடுக்காமல், அதன்மேல் புதிய சாலை அமைப்பதால், சாலையின் உயரம் அதிகமாக காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதில் உடனடியாக தலையிட்டு, முறையான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.