காஞ்சீபுரம் மாவட்டம், பழவந்தாங்கல் செட்டியாரகம் தெரு அருகில் ஆல்பா கல்லூரி செல்லும் சாலை சேதமடைந்து உள்ளது. இந்த சாலையில் கல்லூரி மாணவர்கள் செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் மழை காலங்களில் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் வாகனங்களில் செல்ல முடியவில்லை. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை அமைத்து தர வேண்டும்.