பெங்களூருவில் இருந்து சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் ஏராளமான மக்கள், கார்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை இரவு நேரங்களில் ஒரே நேரத்தில், ஆயிரக்கணக்கான கார்கள், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடிக்கு வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் ஓசூர், பெங்களூரு போன்ற நகரங்களுக்கு பஸ்களில் செல்பவர்களும், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே விடுமுறை நாட்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் பஸ்களை கார்கள் செல்லாத தனி கவுண்டர்கள் வழியாக அனுப்பிடவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.