விக்கிரவாண்டி ஒன்றியம் மேலகொந்தை ஏரிக்கரை சாலையில் விரிவாக்க பணி நடைபெறுகிறது. ஆனால் இந்த பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இதனால் விபத்து ஏற்படும் சூழ்நிலையும் உருவாகி வருகிறது. எனவே பணிகளை விரைந்து முடித்து சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.