மேல்மலையனூர் அருகே திருதலைபூண்டி-முருகன்தாங்கல்பட்டி வரை உள்ள சாலை பலத்த சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. சாலை பள்ளத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் அரங்கேறி வருகிறது. எனவே சாலையை சீரமைக்க வேண்டியது அவசியம்.