ெபங்களூரு தம்புஷெட்டி ரோடு-வெப்ஸ்டர் ரோடு சந்திப்பு பகுதியில் சாலையில் குழி ஏற்பட்டுள்ளது. அந்த சாலையை தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த குழியால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். அங்கு எச்சரிக்கை பலகை எதுவும் வைக்கவில்லை. மேலும், இரவில் அந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் சாலை நடுவே உள்ள குழியை சீரமைக்க வேண்டும்.