சாலை பள்ளம் சரி செய்யப்படுமா?

Update: 2023-08-20 15:35 GMT
பெங்களூரு லாவெல்லே ரோடு 4-வது கிராஸ் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை சீரமைப்பு பணி நடந்தது. இந்த நிலையில் தற்போது அந்த சாலையில் ஒரு பகுதியில் சேதம் அடைந்த பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் சாலை பள்ளத்தை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்