வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

Update: 2023-08-20 10:46 GMT
கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதில் சனி, ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் சிலர் இரு சக்கர வாகனங்களில் அதி வேகத்தில் சென்று பிற வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகிறார்கள். மேலும் அவ்வாறு செல்லும் பலரும் அடிக்கடி விபத்தில் சிக்கி இறப்பதும் தொடர்ந்து வருகின்றன. இந்த அதிவேக இருசக்கர வாகன ஓட்டிகளால் மற்ற பயணிகளுக்கு மிகவும் தொந்தரவாக உள்ளது. ஆகவே போக்குவரத்து பிரிவு போலீசார் சுங்கச்சாவடி பகுதியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கண்காணித்து, அதிவேக வாகன ஓட்டிகளை பிடித்து அவசியம் அபராதம் விதிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்