கோவை மாநகராட்சி 3-வது வார்டு சின்னவேடம்பட்டி அத்திப்பாளையம் சாலையில் சரவணம்பட்டி சாலை சந்திக்கும் இடத்தில் ஆங்காங்கே குழிகள் காணப்படுகின்றன. இந்த குழிகளில் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இறங்கி ஏறி செல்லும்போது, நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும் வாகனங்களும் பழுதாகி விடுகிறது. எனவே குண்டும், குழியுமாக காணப்படும் அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.