கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சென்றாயம்பட்டி முதல் வேலம்பட்டி செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.இதனால் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள், வேலைக்கு செல்வோர், பள்ளிக் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் இச்சாலையில் கிரானைட் கற்கள் லாரியுடன் கவிழும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. எனவே பெரும் விபத்து நடக்கும் முன்பு இந்த சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.