விருத்தாசலம் அருகே கோபுராபுரம் கிராமத்தில் உள்ள சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சேற்றில் வழுக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடைபெறுகிறது. எனவே அப்பகுதியில் புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.