பயன்படுத்த முடியாத நிலையில் நடைபாதை

Update: 2023-08-16 17:13 GMT
பெங்களூரு ரிச்மண்ட் டவுன் லியோனார்டு லைன் பகுதியில் நடைபாதைகள் மிகவும் மோசமாக உள்ளன. நடைபாதையில் பதிக்கப்பட்ட சிமெண்டு கற்கள் உடைந்து கிடக்கும் நிலையில், அந்த இடத்தில் பலர் சிறுநீர் கழித்துவிட்டு செல்கிறார்கள். இதனால் நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் அங்கு துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு இருக்கிறது. இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்