குண்டும், குழியுமான சாலை

Update: 2023-08-16 17:10 GMT

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் பனந்தோப்பு, வாழைகோம்பை, சேரடி மூலை வழியாக நாமக்கல் கொல்லிமலைக்கு செல்லும் சாலை உள்ளது. இதில் வாழைக்கோம்பையில் இருந்து சேரடி மூலை செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்