தர்மபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தின் வடக்கு பகுதி சுற்றுச்சுவரை ஒட்டி அமைந்துள்ள தார் சாலையை வனத்துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களுக்கு செல்பவர்கள் ரெயில்வே சுரங்க பாதையை கடந்து பல்வேறு குடியிருப்பு பகுதிகளுக்கு செல்வோர் என தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் அவதியடைகின்றனர். எனவே இந்த தார் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.