செஞ்சி-சேத்துப்பட்டு சாலை மேல்களவாய் கூட்ரோட்டில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சாலையில் வேகத்தடை இருப்பதற்கான எச்சரிக்கை பலகை வைக்கவில்லை. வேகத்தடையில் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கவில்லை. பரதிபலிப்பான் ஸ்டிக்கர் ஒட்டவில்லை. இதனால் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் வேகமாக வந்து வேகத்தடையில் ஏறி விபத்தில் சிக்குகிறார்கள். இதனை சரி செய்ய வேண்டும், விபத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.