திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர்- செங்குன்றம் செல்லும் சாலையில், மேலானூர் மூலைக்கரை பகுதியில் சாலையின் நடுவில் அபாயகரமான பள்ளம் உள்ளது. சாலை திரும்பும் பகுதியில் இந்த பள்ளம் உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்கிறனர். எனவே, சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்ய சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.