விழுப்புரம் சாலாமேடு வள்ளலார் நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக அங்குள்ள தெருவில் பள்ளம் தோண்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பிலேயே உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையினால் அங்குள்ள சாலை சேறும், சகதியுமாக வயல்வெளி போன்று மாறியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைக்காக வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணியை விரைந்து முடித்து சாலை அமைத்துத்தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.