திருச்சி பாரதியார் சாலையில் இணையும் ஸ்டேட் பேங்க் சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடையில் வெள்ளை வர்ண கோடுகள் பூசப்படாமல் உள்ளதால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சாலையின் குறுக்கே வேகத்தடை அமைத்திருப்பது தெரியாமல் சிலர் நிலை தடுமாறி செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த வேகத்தடையில் வெள்ளை வர்ண கோடு பூச வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.