கோவை உக்கடத்தில் இருந்து கோவைப்புதூர் செல்லும் புட்டுவிக்கி சாலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால் சாலை தோண்டப்பட்டு குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும்.