மேல்மலையனூர் அருகே ஈயகுணம்-தாதம்பட்டி செல்லும் சாலை ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சாலையை கடந்து செல்வதே பெரும் சவாலாக உள்ளது. இதன் காரணமாக கால விரயம் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.