பண்ருட்டி தாலுகா புலவன்குப்பத்தில் இருந்து சேந்தநாடு வழியாக உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலைக்கு செல்லும் வழி மிகவும் குறுகிய நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை அகலப்படுத்த வேண்டும்.