குண்டும்,குழியுமான சாலை
காங்கயம் தாலுகா உத்தமபாளையம் கிராமம் நாகமநாயக்கன்பட்டியில் இருந்து வட்டமலை அணைக்கு செல்லும் கொல்லம்வழி சாலை மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இங்கு நடக்கவே முடியாதபடி கருங்கல், ஜல்லிகள் உள்ளது. கடந்த ஆட்சியில் போடப்பட்ட இந்த சாலையில் மண் கூட போடாததால் மிகவும் சேதம் அடைந்து வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. விவசாயிகள் இருசக்கர வாகனங்களில் பால் கொண்டு செல்லும் போது வண்டி குதித்து செல்வதால் கேன் மூடி கழன்று விழுகிறது. விவசாயிகள், பொதுமக்களின் சிரமத்தை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
-கோபால், வெள்ளகோவில்.
98565 36765