திருச்சி உறையூர்- குழுமணி சாலை வழியாக தினமும் ஏராளமான பஸ்கள், பள்ளி வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் இந்த பிரதான சாலையில் காமட்சியம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் சாலையின் வளைவு பகுதியில் திடீரென சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.