கோவை புலியகுளத்தில் இருந்து சவுரிபாளையம் செல்லும் சாலை மீனா எஸ்டேட் அருகே மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் குண்டும், குழியுமாக உள்ளதால் அந்த வழியாக செல்லும் வழியாக வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சில நேரங்களில் வாகன விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் அந்த வழியாக செல்பவர்கள் கடும் இன்னல்களை சந்திக்கின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.