திருவட்டாரில் இருந்து கொக்கொட்டு மூலை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பேரை, பிளாங்காலை பகுதியில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சிரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரவீன் கிஷோர், திருவட்டார்.