குண்டும், குழியுமாய் சாலை

Update: 2023-08-02 14:26 GMT

திருவள்ளூர் திருவேற்காடு நகராட்சி, வேலப்பன் சாவடி நூம்பல் செல்லும் சாலை குண்டும், குழியுமாக மோசமாக உள்ளது. அதிக கனரக வாகனங்கள் இந்த சாலையில் செல்கின்றன. அடிக்கடி விபத்தும் நடக்கிறது. மேலும் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றார்கள். புதிய சாலை அமைக்க கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய சாலை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்