கோவை அவினாசி சாலையில் சிக்னல் இல்லாத போக்குவரத்து வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே வரவேற்பை பெற்று உள்ளது. ஆனால் அண்ணா சிலை சிக்னல் அருகே உள்ள யூ-டர்ன்(வளைவு) பகுதியில் எந்தவித எச்சரிக்கை பலகையும் வைக்கப்படவில்லை. அந்த வழியாக வரும் வாகனங்கள் திடீரென திரும்பும்போது, பின்னால் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அங்கு எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.