கோவை குனியமுத்தூர்-புட்டுவிக்கி சாலையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், கடந்த ஒரு மாதமாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. அந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் ஆத்துப்பாலம் வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளன. இதன் காரணமாக குனியமுத்தூர்-ஆத்துப்பாலம் சாலையில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே விரைவாக குனியமுத்தூர்-புட்டுவிக்கி சாலை பணியை நிறைவு செய்து, போக்குவரத்து நெரிசல் தீர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.