நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கரியமாணிக்கபுரம்-ஆஸ்ராமம் பகுதிகளுக்கு இடையே ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் இருபுறமும் சிலர் குப்பைகளையும், இறைச்சி கழிவுகளையும் இரவில் கொட்டுகின்றனர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பாலத்தின் இருபுறமும் உள்ள குப்பைகளை அகற்றுவதுடன் அங்கு கொட்டுபவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-உலகப்பன், கரியமாணிக்கபுரம்.