விழுப்புரம் நகராட்சி 30-வது வார்டு கம்பன் நகர் 3-வது தெருவில் பாதாள சாக்கடை பணியின்போது பள்ளம் தோண்டப்பட்டு மூடப்பட்டது. இதனால் அப்பகுதி மண் சாலையாக மாறி விட்டது. மேடும், பள்ளமுமாக மண் குவிந்து கிடப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி் அடைந்து வருகின்றனர். எனவே மண்ணை சமப்படுத்துவதோடு, அங்கு புதிதாக தார்சாலை அமைக்க வேண்டியது அவசியம்.