குண்டும்,குழியுமான சாலை

Update: 2023-07-30 14:53 GMT

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா மருதுவஞ்சேரி முதல் தென்குடி வரை தெற்கு தெரு, ஒத்தவீடு வழியாக செல்லும் சாலை பராமரிப்பின்றி உள்ளது. சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக கிடக்கிறது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக மாணவ-மாணவிகள் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்