நாகை மாவட்டம் வடகரை ஊராட்சியில் உள்ள தென்கரையில் சாலை குண்டும்,குழியுமாக உள்ளது. சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடப்பதால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். மேலும்,குண்டும்,குழியுமான சாலை உள்ளதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?