தார்ச்சாலை வேண்டும்

Update: 2022-07-24 14:48 GMT
நாகை பகுதி கருவேலங்கடை கிராமத்தில் இருந்து மாரியம்மன் கோவில் செல்லும் சாலை பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும், குண்டும்,குழியுமான சாலையினால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் புதிதாக தார்ச்சாலை அமைத்திட நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்