திருவள்ளுர் மாவட்டம், மணலி ஐ.ஓ.சி இடையே பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் மேம்பாலம் பணி நடைபெற்று வருகின்றது.இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேம்பாலம் வேலை நடப்பதால் பல கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லவேண்டிய அவலம் ஏற்படுகிறது. இதனால் சரியான நேரத்தில் வேலைக்கு செல்ல முடியவில்லை. எனவே, மேம்பாலம் வேலையை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.