கான்கிரீட் சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-07-26 12:55 GMT
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் காத்திருந்து பஸ்களில் ஏறி செல்கிறார்கள். இந்த நிழல் கூடையின் முன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் சாலை சில இடங்களில் சேதமடைந்து சமதளமின்றி காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் நடந்து செல்லும் பயணிகள், பொதுமக்கள் தடுமாறி கீழே விழும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு இந்த பகுதியில் உள்ள கான்கிரீட் சாலையை சீரமைத்து முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்