நெகமம் அருகே காளியப்பம்பாளையத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. தேவணாம்பாளையத்தில் இருந்து பஸ்சில் வரும் பொதுமக்கள், நெகமத்தில் இறங்கி சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து காளியப்பம்பாளையத்தில் உள்ள சுகாதார நிலையத்துக்கு வர வேண்டி உள்ளது. இதற்கு காரணம், அங்கு தார்சாலை வசதி இல்லாததுதான். எனவே அங்குள்ள மண்சாலையை தார்சாலையாக மாற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.