குண்டும், குழியுமான சாலை

Update: 2023-07-26 10:31 GMT

கோவை வடவள்ளியில் இருந்து சோமையம்பாளையம் செல்லும் சாலையில் வ.உ.சி. நகரில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் அங்குள்ள சிறிய பாலமும் உடைந்து உள்ளது. இதன் காரணமாக மழைக்காலங்களில் பெருக்கெடுத்து வரும் வெள்ளம், அருகில் உள்ள ஊருக்குள் புகுந்து விடும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த சாலையை சீரமைப்பதோடு, பாலத்தை புதிதாக கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்