பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட திட்டுவிளை மெயின் ரோட்டில் இருந்து மார்த்தால் செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலை பல மாதங்களாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை நேரங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஹக்கீம், மார்த்தால்.