திண்டுக்கல் நாகல் நகர் ரவுண்டானா அருகே உள்ள பள்ளிக்கு செல்லும் சாலையில் புதிதாக சாக்கடை கால்வாய் தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இரவில் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் பள்ளி செல்லும் மாணவர்களும் சிரமப்படுகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.