திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அண்டராயநல்லூர் மெயின் ரோட்டில் சாலை விரிவாக்க பணியின் போது தோண்டப்பட்ட மண்ணை சாலையில் குவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையில் குவிக்கப்பட்டுள்ள மண்ணை அப்புறப்படுத்த வேண்டும்.