கொடுமுடி ஒன்றியத்துக்குட்பட்ட அய்யம்பாளையம் கிராமம் சுமைதாங்கி முதல் பனப்பாளையம் வரை பிரதமமந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் தார்சாலை அமைக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோடு தோண்டப்பட்டது. ஆனால் பணியை பாதியிலேயே விட்டுவிட்டனர். இதனால் ஆங்காங்கே கற்கள் குவியல் குவியலாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக பொதுமக்கள் தட்டுதடுமாறி சென்று கீழே விழுந்து காயம் அடைகின்றனர். உடனே பாதியில் நிற்கும் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.