நாகை அரசு தலைமை ஆஸ்பத்திரி புதிய பஸ் நிலையம் கிழக்கு பகுதியில் உள்ள சாலையில் வேகத்தடை இல்லை. இதன்காரணமாக அந்த வழியாக பஸ் மற்றும் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள், மாணவ-மாணவிகள் சாலையை அச்சத்துடன் கடந்து செல்லும் சூழல் நிலவுகிறது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.