கிருஷ்ணகிரி நகரில் சென்னை, பெங்களூரு சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. விபத்துக்களை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நகரில் பாதி இடங்களில் மட்டுமே இது வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெங்களூரு சாலையில் பாதி இடத்தில் தடுப்புகள் வைக்கப்படவில்லை. மேலும் இந்த தடுப்புகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது நகராட்சி கூட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இந்த தீர்மானத்தை விரைவில் செயல்படுத்தி நகருக்குள் வைக்கப்பட்டுள்ள அனைத்து தடுப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.