சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரின் மையப் பகுதியான தியாகிகள் ரோடு, சரஸ்வதி வாசகசாலை, திருப்பத்தூர் ரோடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலாக உள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் நேரத்தில் மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே அந்த இடத்தில் தானியங்கி சிக்னல் அமைத்து போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.