பண்ருட்டி நகராட்சி 33-வது வார்டு டி.ராசாப்பாளையம் பகுதியில் பெரும்பாலான தெருமின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் இருள்சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. இதை சரிசெய்ய மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.